‘MADE IN INDIA’ குறித்து பேசும் மோடி, பயன்படுத்துவதெல்லாம் “MADE IN CHINA’ தான் – ராகுல்காந்தி

பிரதமர் மோடி Made in India  குறித்து பேசுகிறார். ஆனால் அவர் பயன்படுத்தும், மொபைல் போன், சட்டைகளை பார்த்தால் அதில் ‘Made in China’ என்றுதான் இருக்கும்.

காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி அசாம் சட்டசபை தேர்தலை முன்னிட்டு, அங்கு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அவர், இன்று நாங்கள் உங்களுக்கு ஐந்து உறுதிமொழி அளிக்க நாங்கள் அளிக்கிறோம். தேயிலை தொழிலாளர்களுக்கு 365 ரூபாய் சம்பளம் தருவோம். குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்போம். 5 இலட்சம் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவோம்.  200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்குவோம். குடும்பத் தலைவிகளுக்கு ரூ.2000 வழங்குவோம் என தெரிவித்தார்.

பின் பேசிய அவர், நான் மோடி அல்ல, நான் பொய் சொல்ல மாட்டேன் என்று தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில் பிரதமர் மோடி Made in India  குறித்து பேசுகிறார். ஆனால் அவர் பயன்படுத்தும், மொபைல் போன், சட்டைகளை பார்த்தால் அதில் ‘Made in China’ என்றுதான் இருக்கும். அதில் மேட் இன் இந்தியா, மேட் இன் அசாம் என்று இருக்காது. ஆனால் நாங்கள் மேட் இன் இந்தியா, மேட் இன் அசாம் என்று இருப்பதை தான் விரும்புகிறோம். இதனை பாஜக செய்யாது என்று தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.