அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும்- பிரதமர் மோடி

அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும்- பிரதமர் மோடி

  • ஜார்கண்ட் மாநிலத்தின் 11வது முதலமைச்சராக ஹேமந்த் சோரன் பதவியேற்றார்.
  • வளர்ச்சிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள 81 சட்டமன்ற தொகுதிகளுக்கு கடந்த நவம்பர் மாதம் 30 -ஆம் தேதி தொடங்கி, இந்தமாதம் 20-ஆம் தேதி வரை 5 கட்டமாக தேர்தல் நடைபெற்றது.இந்த தேர்தலில் காங்கிரஸ்-ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா -ராஷ்டிரீய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டது.இந்த கூட்டணி சார்பாக ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா செயல் தலைவர் ஹேமந்த் சோரன் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.பாஜக கூட்டணியில் இருந்த ஜார்கண்ட் விகாஸ் மோர்ச்சா ,அனைத்து ஜார்கண்ட் மாணவர் சங்கம் ஆகிய கட்சிகள்  தேர்தலுக்கு முன்பே பாஜக கூட்டணியில் இருந்து விலகிய நிலையில் பாஜக மட்டும் தனித்து போட்டியிட்டது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை  நடைபெற்றது.

வாக்கு எண்ணிக்கையின் இறுதியில் காங்கிரஸ்-ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா -ராஷ்டிரீய ஜனதா தளம் கூட்டணி 47 தொகுதிகளில் வெற்றிபெற்று ஆட்சியை பிடித்தது.இங்கு ஆட்சியமைக்க குறைந்தபட்சம் 41 தொகுதிகளில் வெற்றிபெற்றிருக்க வேண்டும் என்ற நிலையில் இந்த கூட்டணி 47 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளது.ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா 30 தொகுதிகளிலும்,காங்கிரஸ் 16 தொகுதிகளிலும், ராஷ்டிரீய ஜனதா தளம் தலா ஒரு தொகுதியிலும் வெற்றிபெற்றது. பாஜக 25 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்றது.

இதனால்  ஜார்கண்ட் மாநிலத்தின் 11வது முதலமைச்சராக ஹேமந்த் சோரன் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவருக்கு ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி,திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர்  கலந்துகொண்டனர்.இந்நிலையில் இது குறித்து பிரதமர் மோடி கூறுகையில்,ஜார்க்கண்ட் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என்று தெரிவித்துள்ளார்.
Join our channel google news Youtube