மோடி எங்கள் நாட்டின் பிரதமர், எனக்கும் அவர்தான் பிரதமர்.! பாகிஸ்தான் அமைச்சருக்கு பதிலடி.!

  • பாகிஸ்தான் அமைச்சர் பவாத் ஹூசைன் ட்விட்டரில் பிரதமர் மோடி, டெல்லி தேர்தல் குறித்து கருத்து தெரிவித்திருந்தார். இந்திய மக்கள் பிரதமர் மோடியைத் தோற்கடிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுருந்தார்.
  • பிரதமர் மோடி விமர்சித்த பாகிஸ்தான் அமைச்சர் பவாத் ஹூசைனுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அவரின் ட்விட்டர் பக்கத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கருத்துப் பதிவிட்டுள்ளார்.

டெல்லியில் 70 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 8-ம் தேதியும், 11-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடக்கவுள்ளது. இந்த நிலையில், பாகிஸ்தான் அமைச்சர் பவாத் ஹூசைன் ட்விட்டரில் பிரதமர் மோடி, டெல்லி தேர்தல் குறித்து கருத்து தெரிவித்திருந்தார்.  அதில், அவர் பதிவிட்டுருந்தது, இந்திய மக்கள் பிரதமர் மோடியைத் தோற்கடிக்க வேண்டும் என்றும், கடும் நெருக்கடியால் டெல்லி தேர்தலிலும் பிரதமர் மோடியின் கட்சி தோல்வியை சந்திக்கவேண்டும் என்றும், மோடியின் அற்பத்தனமான பேச்சும், மிரட்டல் போக்கும் பிராந்தியத்துக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. மேலும் காஷ்மீர் விவகாரம், குடியுரிமைத் திருத்தச்சட்டம், பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றில் மோடி உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் ஆதரவை இழந்துவிட்டார் எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், பிரதமர் மோடி விமர்சித்த பாகிஸ்தான் அமைச்சர் பவாத் ஹூசைனுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அவரின் ட்விட்டர் பக்கத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கருத்துப் பதிவிட்டுள்ளார். அதில் நரேந்திர மோடி எங்கள் நாட்டின் பிரதமர், எனக்கும் அவர்தான் பிரதமர். டெல்லி தேர்தல் என்பது இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்சினை, அதில் தீவிரவாதத்துக்கு ஊற்றுக்கண்ணாகத் திகழும் பாகிஸ்தான் அதில் தலையிடுவதை நாங்கள் பொறுத்திருக்கமாட்டோம். எப்படிப்பட்ட முயற்சிகளைப் பாகிஸ்தான் செய்தாலும், அவர்களால் இந்தியாவின் ஒற்றுமையைச் சிதைக்க முடியாது எனத் தெரிவித்துள்ளார்.

பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Recent Posts

குழந்தைகளுக்கு AC பயன்படுத்துவதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க.!

Air conditioner- குழந்தைகளுக்கு ஏசி பயன்படுத்தும் போது கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளை இப்பதிவில் காணலாம். கோடை காலத்தில் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தை போக்கவும், வெப்ப  காற்றில் இருந்து …

10 mins ago

அந்த நடிகையால் கடும் கோபம் அடைந்த எம்.ஜி.ஆர்! அப்படி என்ன செஞ்சிட்டாரு?

M.G.Ramachandran : பிரபல நடிகை ஒருவர் செய்த விஷயம் எம்.ஜி.ஆரை ரொம்பவே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. எம்.ஜி.ஆர் திரைப்படங்களில் நடித்து கொண்டு இருந்த காலத்தில் எல்லாம் அவருடைய படங்களின்…

27 mins ago

யூடியூப்பிற்கு போட்டியாக மஸ்க்கின் பிரத்யேக டிவி ஆப்… உறுதிப்படுத்திய தலைமை நிர்வாக அதிகாரி!

X TV App: யூடியூப்பிற்கு சவால் விடும் வகையில் X TV App உருவாகி வருகிறது என்று அதன் தலைமை நிர்வாக அதிகாரி உறுதிப்படுத்தியுள்ளார். எலான் மஸ்க்கின்…

46 mins ago

டி20 அணியை அறிவித்த இர்பான் பதான் ..! கேள்வி எழுப்பும் ரசிகர்கள் !

Irfan Pathan : இந்த ஆண்டில் நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பைக்கு தகுதியான 15 இந்திய வீரர்களை இர்பான் பதான் தேர்ந்தெடுத்ள்ளார். ஐபிஎல் தொடர் முடிந்த பிறகு டி20…

2 hours ago

செட்டிநாடு ஸ்பெஷல்.! பால் கொழுக்கட்டை செய்வது எப்படி?

பால் கொழுக்கட்டை -பால் கொழுக்கட்டை சுவையாகவும் கரையாமலும் வர எப்படி செய்வது என இப்பதிவில் காணலாம். தேவையான பொருட்கள்: பால் =300 ml அரிசி மாவு =1…

2 hours ago

விவிபேட் வழக்கு : உச்சநீதிமன்றத்தின் கேள்விகளும்… தேர்தல் ஆணையத்தின் விளக்கங்களும்…

VVPAT Case : EVM மிஷின்களில் ஒருமுறை மட்டுமே புரோகிராம் பதிவேற்ற முடியும் என தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) மூலம் தேர்தலில்…

2 hours ago