கலைஞரின் பிறந்தநாளையொட்டி இலவச திருமணம் செய்து வைத்த மு.க.ஸ்டாலின்!

கலைஞரின் பிறந்தநாளையொட்டி இலவச திருமணம் செய்து வைத்த மு.க.ஸ்டாலின். கலைஞர்

By leena | Published: Jun 03, 2020 09:14 AM

கலைஞரின் பிறந்தநாளையொட்டி இலவச திருமணம் செய்து வைத்த மு.க.ஸ்டாலின்.

கலைஞர் கருணாநிதி, தமிழக முதல்வராக 5 முறை இருந்துள்ளார். மேலும், இவர் பல ஆண்டுகளாக திமுக தலைவராக இருந்து, தனது அரசியல் வாழ்வில், பல சாதனைகளை படைத்து, இம்ம்மண்ணை விட்டு மறைந்தாலும், இன்று பலரும் இவர் பேர் சொல்லும் அளவிற்கு வாழ்ந்துள்ளார்.

இந்நிலையில், கலைஞர் மு.கருணாநிதியின் 97-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து, இவரது திருவுருவப்படத்திற்கு, மு.க.ஸ்டாலின், கனிமொழி, துரைமுருகன் மற்றும் பல அரசியல் பிரபலங்கள் மரியாதை செலுத்தியுள்ளனர். 

இதனையடுத்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலைஞரின் பிறந்தநாளையொட்டி, அவரது நினைவிடத்தில், இலவச திருமணம் நடத்தி வைத்துள்ளார். மேலும், கொரோனா பரவலால் கருணாநிதியின் பிறந்தநாளுக்காக எவ்வித ஆடம்பர நிகழ்வுகளையும் நடத்த வேண்டாம் என தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

Step2: Place in ads Display sections

unicc