“எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழா” எனக்கு உடன்பாடில்லை மு.க ஸ்டாலின் அறிக்கை…!!!

எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழாவில் பங்கேற்க தனக்கு உடன்பாடில்லை இன்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அறிக்கையில் தெரிவித்துள்ளார்

மு.க ஸ்டாலின் தனது அறிக்கையில் அரசு விழா என்ற பெயரில் கட்சி அரசியலுக்காகவும், இலாப நோக்கத்துடனும் எம்.ஜி.ஆரின் பெயரைப் பயன்படுத்தும் இது போன்ற விழாக்களில் தனக்கு உடன்பாடில்லை என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Related image

மேலும் எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழா அழைப்பிதழில், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் தன்னுடைய பெயரை இடம்பெறச் செய்திருக்கும் அரசியல் பண்பாட்டை மதிப்பதாகவும் மற்றும் மாவட்டம் தோறும் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாக்களில் திமுக அதிக அளவில் விமர்சிக்கப்பட்டதை சுட்டி காட்டியுள்ள ஸ்டாலின், நிறைவு விழா என்பது, இன்றைய ஆட்சியாளர்களின் மிச்சமிருக்கும் அரசியல் பயணத்திற்காக மக்கள் வரிப்பணத்தில் அரசு செலவில் நடத்தப்படும் ஆடம்பரமான விழா என குறிப்பிட்டுள்ளார்.

Related image

அதுமட்டுமல்லாமல் உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காமல், பல நூறு விளம்பர பேனர்களை மக்களின் போக்குவரத்திற்கு இடையூறாக வைக்கப்பட்டுள்ளதாகவும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவின் பின்னணியையும் உள்நோக்கத்தையும் புரிந்துகொண்டு  தாம்  அதில் பங்கேற்பதை தவிர்ப்பதாகவும் ஸ்டாலின் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

DINASUVADU

author avatar
kavitha

Leave a Comment