ரூ.Rs 44,000 க்கு..4 கலரில் இந்தியாவில் களமிறங்கிய "MISO" மின்சாரம் ஸ்கூட்டர்.!

புதுடெல்லியில் நேற்று ஜெமோபாய் எலக்ட்ரிக் நிறுவனம் தனது புதிய

By gowtham | Published: Jun 27, 2020 04:53 PM

புதுடெல்லியில் நேற்று ஜெமோபாய் எலக்ட்ரிக் நிறுவனம் தனது புதிய படைப்பு மின்சார ஸ்கூட்டரான "மிசோவை" இந்தியாவில் ரூ.44,000 க்கு அறிமுகம் செய்வதாக அறிவித்தது.

இந்த ஸ்கூட்டர் ஒரு முறை சார்ஜ் செய்தால் 75 கி.மீ வரை ஓடும் மேலும் இரண்டு மணி நேரம் சார்ஜ் செய்தால் 90 கி.மீ வரை ஓடுமாம். மணிக்கு 25 கி.மீ வேகத்தில் அதிகபட்சமாக இயங்கும் மிசோ, சிவப்பு, வானம் நீலம், பச்சை மற்றும் ஆரஞ்சு ஆகிய நான்கு வண்ணங்களில் கிடைக்கிறது.

இந்த மினி மின்சார ஸ்கூட்டரை வருகின்ற ஜூலை முதல் அதன் 60 ஷோரூம்களில் மூலம் இந்தியா முழுவதும் வாங்க முடியும் என்று அந்நிறுவனம் கூறியுள்ளது. அனைத்து மிசோ வாடிக்கையாளர்களுக்கும் மூன்று ஆண்டு வரை இலவச சர்வீஸ் செய்து தரப்படும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த மிசோ போக்குவரத்தில் சிக்கிக்கொள்ளாமல் இருக்க உதவும் மேலும் இந்த கொரோனா தொற்று நோயாலிருந்து பாதுகாக்க சவாரி தேர்வு செய்ய ஒரே ஒரு இருக்கை அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டர் ஒரு ஹெக்ஸா ஹெட் லைட்டுடன் கிடைக்கிறது.

இந்த மிசோவில் இரண்டு வகைகள் உள்ளது ஒன்று லக்கேஜ் கேரியருடன் 120 கிலோ சுமை வரை உள்ளது இனொன்று கேரியர் இல்லாமல் உள்ளது. ஜெமோபாய் மிசோவை அனைத்து முன் முன்பதிவுகளுக்கும் ரூ. 2,000 ஆரம்ப தள்ளுபடியுடன் வழங்குகிறது.

இந்த ஸ்கூட்டரின் முக்கியமான சுவாரஸ்யமான அம்சம் என்னவென்றால் இதற்கு உரிமம் அல்லது ஆர்டிஓ அனுமதி எதுவும் தேவையில்லை.

Step2: Place in ads Display sections

unicc