சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் தவறான தகவல்கள் தான் கொரோனா உயிரிழப்புக்கு காரணம் – அதிபர் ஜோ பைடன்

சமூக வலைத்தளங்களில் கொரோனா தடுப்பூசிகள் தொடர்பாக பகிரப்படும் தவறான தகவல்கள் காரணமாக, அமெரிக்கர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள தயங்குவதாக அமரிக்க அதிபர் தெரிவித்துள்ளார். 

முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், தொடர்ந்து அனைத்து நாடுகளிலும் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இந்நிலையில், இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஒவ்வொரு நாட்டு அரசும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, அனைத்து நாடுகளிலும் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது.

அந்தவகையில் வல்லரசு நாடான அமெரிக்காவில், தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அவர்கள், சமூக வலைத்தளங்களில் கொரோனா தடுப்பூசிகள் தொடர்பாக பகிரப்படும் தவறான தகவல்கள் காரணமாக, அமெரிக்கர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள தயங்குவதாகவும், இந்த தகவல்கள் தான் பலரது உயிரிழப்புக்கு காரணம் என்றும், வதந்திகள் பரவுவதை தடுக்க சமூக வலைதள நிறுவனங்கள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், அமெரிக்க மருத்துவக் குழுவும், சமூக வலைத்தளங்களில் கொரோனா தடுப்பூசிகள் தொடர்பாக பகிரப்படும் தவறான தகவல்கள் பொது சுகாதாரத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் என்று எச்சரித்துள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.