அவசர சிகிச்சை பிரிவில் 66 பேர்.! ரூ.10 லட்சம் நிவாரண தொகை வழங்கிய அமைச்சர்கள்…

விழுப்புரத்தில் குடித்து 14 பேர் பலியான சம்பவத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரண தொகை வழங்கப்பட்டது.

கடந்த சில நாட்களாக கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த விவகாரம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கள்ளச்சாராயம் குடித்து உடல்நிலை பாதிக்கப்பட்ட 66 பேர் மருத்துவமனைகளில் அவசர சிகிச்சை பெற்றுவருவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தகவல் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் பேசுகையில், உரிய முறையில் சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்ய சிறப்பு மருத்துவ அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார். சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகள் முறையாக வழங்கப்பட்டுவருகிறது என்றார்.

நிவாரண தொகையை வழங்கிய அமைச்சர்கள்:

அந்த வகையில், விழுப்புரத்தில் குடித்து 14 பேர் பலியான சம்பவத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரண தொகைக்கான காசோலைகள் இன்று வழங்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சென்று சந்தித்த அமைச்சர்கள் பொன்முடி, செஞ்சி மஸ்தான் ஆகியோர் இந்த காசோலைகளை வழங்கியுள்ளனர். மேலும், அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதல் தெரிவித்ததுடன், தேவையான உதவிகளை செய்வதாக உறுதி அளித்தனர்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.