மழைநீர் வடிகால் பணிகள்.! அமைச்சர்களின் திடீர் வருகை.. வெள்ளையாக மாறிய தெருக்கள்.!

சென்னை சைதாப்பேட்டை பகுதியில் அமைச்சர்கள் வருவதை அறிந்த மாநகராட்சி அதிகாரிகள் அந்த சாலையை அவசர அவசரமாக சுத்தம் செய்து பிளீச்சிங் பவுடர் போட்டு பளபளக்க வைத்தனர்.

சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்து வருவதால், பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்குவதும், அதனை வெளியேற்ற மழைநீர் வடிகால் பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இதனை தமிழக அமைச்சர்கள் தொடர்ந்து மேற்பார்வையிட்டு வருகின்றனர். அதில், சென்னை சைதாப்பேட்டையில் தான் அந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

சென்னை சைதாப்பேட்டையில் அமைச்சர்கள் வரும் செய்தி அறிந்ததும், மாநகராட்சி ஊழியர்கள் விறுவிறுவென வேலை செய்து பிளீச்சிங் பவுடர் மொத்தத்தையும் கொட்டி அந்த தெரு சாலையினை வெள்ளையாக மாற்றிவிட்டார்கள். அதன்பிறகு, அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன் ஆகியோர் வந்து ஆய்வு பணிகளை மேற்கொண்டனர்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment