ரேஷன் கடை பணியாளர்களுக்கு அமைச்சர் எச்சரிக்கை..!

அரிசி கடத்தல் போன்ற செயல்களில்  ஈடுபட்டால்  பணியாளர்கள் மீது கடும் நடவடிக்கை  எடுக்கப்படும் என அமைச்சர் ஐ.பெரியசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அரிசி கடத்தல் போன்ற முறைகேடுகளில் ஈடுபட்டால் ரேஷன் கடை பணியாளர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் ஐ.பெரியசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார். குற்ற வழக்கு தொடரப்பட்டு சம்பந்தப்பட்ட பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்படுவர் என தெரிவித்தார்.

முடிச்சூரில் ரேஷன் அரிசியை வேனில் கடத்த முயன்றபோது விற்பனையாளர் கோமதி கைது செய்யப்பட்டார். விற்பனையாளர் கோமதி இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.