தமிழகத்தில் ஸ்மார்ட் மீட்டர்… மாதந்தோறும் மின் கட்டணம்.! அமைச்சர் தங்கம் தென்னரசு பதில்.! 

By

Minister Thangam Thennarasu

தமிழகத்தில் ஸ்மார்ட் மின் மீட்டர் பொருத்தப்பட்ட பின்னர் மாதந்தோறும் மின்கட்டணம் வசூல் செய்யப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் தற்போது அனைவரது வீடுகளிலும் டிஜிட்டல் மீட்டர் பயன்படுத்தப்பட்டு அதன் மூலம் மின் உபயோகம் கணக்கிடப்பட்டு, இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மின் கட்டணம் செலுத்தும் முறை நடைமுறையில் இருக்கிறது.

இதனை மேம்படுத்தும் நோக்கில், அடுத்ததாக தமிழகம் முழுவதும் ஸ்மார்ட் மின் மீட்டர் பொருத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், தற்போது அதனை புதிய மின்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதிப்படுத்தியுள்ளார்.

அவர் கூறுகையில், ஸ்மார்ட் மீட்டர் அமைப்பதற்காக தற்போது பல்வேறு நிறுவனங்களிடம் டெண்டர் கோரப்பட்டுள்ளது. அடுத்த மாத துவக்கத்தில் டெண்டர் வேலைகள் ஆரம்பமாக உள்ளது. அதன் பிறகு உறுதிசெய்யப்பட்டு அனைத்து வீடுகளிலும் ஸ்மார்ட் மீட்டர் பயன்பாட்டிற்கு வரும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். இந்த ஸ்மார்ட் மீட்டர் பயன்பாட்டுக்கு வந்தால் மாதம் ஒருமுறை மின்கட்டணம் செலுத்தப்படும் நடைமுறை செயல்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.