மாணவி கனிமொழியின் குடும்பத்திற்கு அமைச்சர் சிவசங்கர் ரூ.10 லட்சம் நிதி உதவி

மாணவி கனிமொழியின் குடும்பத்திற்கு அமைச்சர் சிவசங்கர் ரூ.10 லட்சம் நிதி உதவி

நீட்தேர்வால் உயிரிழந்த மாணவி கனிமொழியின் குடும்பத்திற்கு அமைச்சர் சிவசங்கர் திமுக சார்பில் ரூ.10 லட்சம் நிதி உதவி வழங்கினார். 

மருத்துவ சேர்க்கைகான நீட் தேர்வு கடந்த 12 ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. இந்த தேர்வை தமிழகத்திலிருந்து 1.10 லட்சம் பேர் எழுதியிருந்தனர். இந்நிலையில், நீட் தேர்வினை எழுதிய அரியலூரை சார்ந்த கனிமொழி என்ற மாணவி  நீட் தேர்வு வினாத்தாள் கடினமாக இருந்ததாகவும், தனக்கு மருத்துவ படிப்பு சேர்க்கை கிடைக்குமா..? என அச்சம் இருப்பதாக தனது பெற்றோரிடம் கூறியுள்ளார்.

இதைத்தொடர்ந்து, நேற்று மாலை கனிமொழி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். கனிமொழி தற்கொலை செய்ததற்கு காரணம், நீட் தேர்வில் தோல்வி பயம் என்று கனிமொழியின் பெற்றோர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில்,  நீட்தேர்வால் உயிரிழந்த மாணவி கனிமொழியின் பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறிய தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கர் திமுக சார்பில் ரூ.10 லட்சம் நிதி உதவி வழங்கி ஆறுதல் கூறினார்.

தமிழகத்தில் இதுவரை மாணவி கனிமொழியுடன் சேர்த்து நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை 15 ஆகும்.

author avatar
murugan
Join our channel google news Youtube