தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை என கூறிய எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் பதிலடி..!

தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை என கூறிய எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் பதிலடி..!

மே 6-ஆம் தேதி எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருக்கும்போது தமிழகத்தின் ஒரு நாள் ஆக்சிஜன் கையிருப்பு 230 மெட்ரிக் டன் தற்போதைய ஒருநாள் கையிருப்பு 650 மெட்ரிக் டன் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

முன்னாள் முதல்வரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி எடப்பாடி அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்தார். பின் செய்தியாளர்களிடம் பேசிய, தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை குறைத்து காட்டப்படுகிறது. அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை உள்ளது. கடந்த ஆட்சியில் அதிமுக அரசு எடுத்த நடவடிக்கைகளை தொடர்ந்தால் மட்டுமே நிலைமை கட்டுக்குள் வரும். பரிசோதனையை மூன்று லட்சமாக உயர்த்தவும், தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், துதமிழக அரசு மேற்கொண்ட தீவிர நடவடிக்கையால் கொரோனா குறைந்து வருகிறது. தமிழகத்தில்தான் அதிகளவு ஆர்டி-பிசிஆர் பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. மே 6-ஆம் தேதி எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருக்கும்போது தமிழகத்தின் ஒரு நாள் ஆக்சிஜன் கையிருப்பு 230 மெட்ரிக் டன் தற்போதைய ஒருநாள் கையிருப்பு 650 மெட்ரிக் டன் உள்ளது என தெரிவித்தார்.

முன்னாள் அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், விஜயபாஸ்கர் உள்ளிடோர் தமிழக அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பாராட்டுகின்றனர் என கூறினார்.

author avatar
murugan
Join our channel google news Youtube