தேசிய மாணவர் படையினருக்கு பயிற்சி வழங்க புதிய செயலி ! தொடங்கி வைத்தார் ராஜ்நாத் சிங்

தேசிய மாணவர் படையினருக்கு பயிற்சி வழங்க புதிய செயலி ! தொடங்கி வைத்தார் ராஜ்நாத் சிங்

தேசிய மாணவர் படையினருக்கு பயிற்சி வழங்கும் செல்போன் செயலியை  மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று தொடங்கிவைத்தார்.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதனால் பள்ளிகள் , கல்லூரிகள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளது.இதன் விளைவாக பள்ளி , கல்லூரிகளில் ஆன்லைன் மூலமாக படங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் தேசிய மாணவர் படையினருக்கு பயிற்சி வழங்க செல்போன் செயலி ( Directorate General National Cadet Corps  Mobile Training App )ஓன்று உருவாக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் தேசிய மாணவர் படையினருக்கு பயிற்சி வழங்கும் செல்போன் செயலியை  மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று தொடங்கிவைத்தார்.டெல்லியில் இருந்து காணொளி காட்சி மூலமாக நடைபெற்று நிகழ்ச்சியில் ராஜ்நாத் சிங் தேசிய மாணவர் படை வீரர்களிடம் கலந்துரையாடினார்.அப்பொழுது அவர்களிடம் கூறுகையில்,மாணவர்கள் அனைவரும் சிறந்த எதிர்காலத்தை அடைவதற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறன். கொரோனாவால் மாணவர்கள் நேரடியாக பயிற்சி மேற்கொள்ள வாய்ப்பு இல்லாத நேரத்தில் டிஜிட்டல் முறையிலான கற்பித்தால் அவர்களுக்கு பயனளிக்கும் என்று தெரிவித்தார்.எத்தகைய சவாலையும், உறுதிப்பாடு மற்றும் தன்னம்பிக்கையுடன் எதிர்கொண்டு சாதனைபடைக்க முடியும்.கொரோனா பரவி வரும் சமயத்தில் முன்கள பணியாளர்களுக்கு பல்வேறு நிலைகளில் உறுதுணையாக செயல்பட்ட 1 லட்சத்திற்கும் மேற்பட்ட தேசிய மாணவர் படையினருக்கு பாராட்டுகளை தெரிவித்து கொள்வதாக தெரிவித்தார். 

Join our channel google news Youtube