#Breaking:ரயில்வே துறையில் 5-ஜி இணையதள சேவை – மத்திய அமைச்சரவை ஒப்புதல்..!

  • ரயில்வே துறையில் 5-ஜி இணையதள சேவையை வழங்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
  • இதனால்,அடுத்த 5 ஆண்டுகளில் சிக்னல் நவீனமயமாக்கல் மற்றும் ரயில்வேயில் 5 ஜி ஸ்பெக்ட்ரம் சேவையை செயல்படுத்த 25,000 கோடி ரூபாய் செலவிடப்படும்,என்று மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

இன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியதாவது,

  • “ரயில்வே துறையில் 5-ஜி இணையதள சேவையை வழங்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
  • இதனால்,அதிவேக தகவல்தொடர்புகளை அதிகரிப்பதற்காக,அரசின் 700 மெகா ஹெர்ட்ஸ் அலைவரிசையில் (Band) இருந்து,மத்திய ரயில்வேக்கு 5 மெகா ஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கப்பட்டது.
  • இதன்காரணமாக,அடுத்த 5 ஆண்டுகளில் சிக்னல் நவீனமயமாக்கல் மற்றும் ரயில்வே துறையில் 5 ஜி ஸ்பெக்ட்ரம் சேவையை செயல்படுத்த ரூ.25,000 கோடி செலவிடப்படும்.
  • மேலும்,மேக்-இன் இந்தியா திட்டத்தின் கீழ் 4 இந்திய நிறுவனங்கள் உருவாக்கிய ரயில்கள் மோதல் தவிர்ப்பு முறை மற்றும் தகவல் தொடர்பு அமைப்புக்கு (டி.சி.ஏ.எஸ்),மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது
  • இதனால்,இனி விபத்துகளின்றி ரயில் பயணத்தை பாதுகாப்பானதாகவும்,வேகமாகவும் இயக்க முடியும்”,என்று அவர் தெரிவித்தார்.