ஆட்டோ மூலம் வீடு வீடாக கபசுர குடிநீர் வழங்கிய அமைச்சர் ஜெயக்குமார்!

ஆட்டோ மூலம் வீடு வீடாக கபசுர குடிநீர் வழங்கிய அமைச்சர் ஜெயக்குமார். தமிழகம்

By leena | Published: May 27, 2020 04:46 PM

ஆட்டோ மூலம் வீடு வீடாக கபசுர குடிநீர் வழங்கிய அமைச்சர் ஜெயக்குமார்.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதுவரை தமிழகத்தில் 17,728 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 127 பேர் உயிரிழந்துள்ளனர். 

இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள மாவட்டங்களில் சென்னை முதலிடத்தில் உள்ள நிலையில், ராயபுரம் மண்டலத்தில் கொரோனா தொற்று அதிகமாக காணப்படுகிறது. இதனையடுத்து, ராயபுரம் மண்டலத்தில், ஆட்டோக்கள் மூலம் வீடுவீடாக சென்று, கபசுர குடிநீர், மூலிகை தேநீர் வழங்கும் பணியை அமைச்சர் ஜெயக்குமார் தொடங்கி வைத்தார். 

இந்த நிகழ்வில், சென்னை கொரோனா தடுப்பு கண்காணிப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் மற்றும் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த, தனி கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளார். 

Step2: Place in ads Display sections

unicc