அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இன்று மாலை சுயநினைவு திரும்பும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
இதய அறுவை சிகிச்சைக்காக அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இன்று காலை சென்னை காவேரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நிறைவடைந்தது. அறுவை சிகிச்சைக்கு பின்னர் அவரது உடல்நிலை சீராக உள்ளது என மருத்துவமனை நிர்வாகம் அறிவிப்பை வெளியிட்டது.
இதனை தொடர்ந்து சென்னையில் யோகா தின நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தற்போது இதய அறுவை சிகிச்சை முடிந்துள்ளதால்இன்று மாலை அவருக்கு சுயநினைவு திரும்பும் என அமைச்சர் கூறினார்.