சர்கார் பட பிரச்னை…!முடிவுக்கு வந்ததாக அமைச்சர் கடம்பூர் ராஜூ அறிவிப்பு ..!

சர்கார் பட பிரச்னை முடிவுக்கு வந்ததாக அமைச்சர் கடம்பூர் ராஜூ தகவல் தெரிவித்துள்ளார்.

தளபதி விஜய் மற்றும் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் 3வதாக உருவான திரைப்படம் சர்கார். இப்படத்திற்க்கு ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பு இருந்தது.படத்திற்கு எதிர்பார்த்தது போலவே முதல் நாள் நல்ல வசூல் செய்தது.

ஆனால் படத்தில் அரசை விமர்சித்து பல காட்சிகள், வசனங்கள் இடம் பெற்றது. அதிலும் குறிப்பாக அதிமுக ஆட்சியில் கொடுத்த இலவச மிக்ஸியை இயக்குனர் முருகதாஸ் தீயில் எரிவது போல காட்சி இடம்பெறும் இது அதிமுககாரர்களை மிகுந்த கோபத்தை உண்டாக்கியது. ஆதலால் அவர்கள் சர்கார் ஓடும் திரையரங்கில் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

இதன் பின்  சர்கார் படத்தில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய காட்சிகளை மறுதணிக்கையில் தணிக்கைக்குழு நீக்கியது.சர்கார் படத்தில் இடம்பெற்றிருந்த அதிமுக அரசை விமர்சித்த காட்சிகளை நீக்கியது.

இந்நிலையில்  சர்கார் பட பிரச்னை முடிவுக்கு வந்ததாக அமைச்சர் கடம்பூர் ராஜூ தகவல் தெரிவித்துள்ளார்.அதேபோல் அவர் கூறுகையில், சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை ஆகும்., சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டதால் பிரச்னை முடிவுக்கு வந்துவிட்டது. மேலும் முதலமைச்சர் பழனிசாமியை சந்திக்க நடிகர் விஜய் நேரம் கேட்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.