1,516 கோடிரூபாய் செலவில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்.! அமைச்சர் கே,என்.நேரு நேரில் ஆய்வு.!

செங்கல்பட்டில் கடல்நீரை குடிநீராக மாற்றும் திட்டம் நடைபெறும் பணிகளை அமைச்சர் கே.என்.நேரு நேரில் ஆய்வு செய்தார். 

செங்கல்பட்டு மாவட்டத்தில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் கடந்த 2019ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு தற்போது இரண்டாம் கட்ட பணிகள் பெரும்பாலும் முடிந்துவிட்டது. இந்த பணிகள் குறித்து அமைச்சர் கே.என்.நேரு நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

அதன் பிறகு செய்தியாளர்களிடம் அமைச்சர் பேசுகையில்,  கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் 1,516.82 கோடி ருபாய் செலவில் நிறைவேற்றப்பட்டு வருகிறது. தற்போது இரண்டாம் கட்ட பணிகள் நடைபெறுகிறது. குழாய் பதிக்கும் பணிகள் 96 சதவீதம் முடிவடைந்துள்ளன. ஜூன் மாதத்தில் இரண்டாம் கட்ட பணிகள் நிறைவடைந்துவிடும்.. ஜூலை மாதத்தில் மக்கள் பயன்பாட்டிற்கு வந்துவிடும்.

விரைவில் மூன்றாம் கட்ட பணிகள் தொடங்கும். இந்த திட்டம் மூலம் 150 மில்லியன் லிட்டர் குடிநீர் நமக்கு கிடைக்கும் எனவும் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment