மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களின் தாய் காலமானார்....

மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களின் தாய் காலமானார்....

மத்திய வெளியுறவு அமைச்சர்  ஜெய்சங்கர் அவர்களின்  தாயார்  சுலோசனா சுப்ரமணியம் (90)  அவர்கள்  நீண்ட நாட்களாக நோய்வாய்ப்பட்டு இருந்த நிலையில் அவர் நேற்று காலமானார். இந்த தகவலை அமைச்சர்  ஜெய்சங்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் தாயுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றையும் அதில் வெளியிட்டு இருந்தார். தனது தாயின் நோய் காலத்தில் உதவி செய்த அனைவருக்கும் நன்றியும் கூறியிருந்தார். சுலோசனா மறைவுக்கு மத்திய மந்திரி கிரண் ரிஜிஜு, பா.ஜனதா தலைவர் ராம் மாதவ், நிதி ஆயோக் தலைவர் அமிதாப் கந்த் ஆகியோர் இரங்கல் தெரிவித்து உள்ளனர். இவரது கணவர் திருச்சியை சேர்ந்த சுப்ரமணியம் ஆவார். இவர் இந்திய அணுசக்தி கோட்பாட்டின் தந்தை என அழைக்கப்படுகிறார், இவர்  கடந்த 2011-ம் ஆண்டு காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது. https://twitter.com/DrSJaishankar/status/1307310943035039745?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1307310943035039745%7Ctwgr%5Eshare_2&ref_url=https%3A%2F%2Fwww.dailythanthi.com%2FNews%2FIndia%2F2020%2F09%2F20073905%2FForeign-Minister-S-Jaishankars-Mother-Dies.vpf  

Latest Posts

#IPL2020: டாஸ் வென்ற பெங்களூர் அணி பேட்டிங் தேர்வு ! சென்னை அணியில் இரண்டு மாற்றங்கள்
மற்றவர்களை பேச விடாமல் பேசுவது நீங்கள் தான்.! அனிதாவை வறுத்தெடுக்கும் உலகநாயகன்.! 
பண்டிகை காலங்களில் படம் வெளியாவதில் அரசு தடை இல்லை - கடம்பூர் ராஜூ
#HeavyRain: தமிழகத்தின் 7 மாவட்டங்களில் கனமழை - வானிலை ஆய்வு மையம்
மாசு கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறினால் ரூ.1.21லட்சம் அபராதம்.! டெல்லி அரசு அதிரடி.!
ஹைதராபாத் உழவர் சந்தைகளில்ஒரு கிலோ வெங்காயம் ரூ .35க்கு விற்பனை.!
பயனாளர்களுக்கு அதிர்ச்சி..! இந்த சேவைக்கு இனி கட்டணம்..!
திருமாவளவனை கண்டித்து பாஜக மகளிர் அணி போராட்டம் - எல்.முருகன்
"சூரரை போற்று" படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு.!
நவம்பர் 6 முதல் டிசம்பர் 6 வரை வேல் யாத்திரை- எல்.முருகன்..!