திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் இருவரும் சந்தித்து பேசியுள்ளனர். இவர்களது சந்திப்பு ஒரு மணி நேரம் நடைபெற்றது. பலரும் இவர்களது சந்திப்பு குறித்து பல விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

இந்நிலையில், அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் இதுகுறித்து பேசுகையில், சந்திப்பு என்பது ஒரு மணி நேரமா நடக்கும்? என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், திமுகவை பொறுத்தவரையில், அரசியல் கொள்கை கிடையாது என்றும், அவர்களுக்கு பணம், பதவி தான் முக்கியம் என்றும் கூறியுள்ளார்.