இம்மாத இறுதிக்குள் அனைத்து ரேஷன் கடைகளிலும் QR கோடு வசதி மூலம் பணம் செலுத்தும் வசதி செயல்படுத்தப்படும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் QR கோடு வசதி மூலம் இணையதள செயலி வாயிலாக பணம் செலுத்தும் வசதியை இந்த மாத இறுதிக்குள் கொண்டு வர அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
பொதுவாக, ஒரு சில ரேஷன் கடைகளில் சில்லரை தட்டுப்பாடு, மீதி பணத்திற்கு வேறு பொருள் வாங்குவது, அல்லது சில்லறைகளுக்கு நேரம் கடந்து காத்திருப்பது போன்ற பிரச்சனைகள் இருக்கின்றன. இதனை தவிர்க்கும் பொருட்டு மற்ற கடைகளில் இருக்கும் ஆன்லைன் பணபரிமாற்ற வசதி போல ரேஷன் கடைகளிலும் இம்மாத இறுதிக்குள் இந்த வகை பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட உள்ளது என்றும்,
மேலும், இனி ரேஷன் கார்டு தொலைந்து போனால், அதனை ஆன்லைனில் விண்ணப்பித்து, அதனை ஆதார் கார்டு போல, ஆன்லைனில் பெற்று கொள்ளலாம் எனவும் உணவு மற்றும் உணவு பொருள்வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.