#BREAKING: 10-ஆம் தேதி முதல் ரூ 2000 வழங்கப்படும் அமைச்சர் சக்கரபாணி அறிவிப்பு..!

முதல் தவணை ரூ. 2 ஆயிரம் கொரோனா நிதியை வருகின்ற 10 ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

நேற்று காலை ஆளுநர் மாளிகையில் மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்ற நிலையில், பின்னர் முன்னாள் தலைவர்களுக்கு மரியாதை செலுத்தினார். இதைத்தொடர்ந்து, தலைமைச் செயலகம் வந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு காவல்துறை அணிவகுப்பு அளிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, முதல்வர் இருக்கையில் அமர்ந்த மு.க. ஸ்டாலின் 5 முக்கிய கோப்பில் கையெழுத்திட்டர். அதில், ஓன்று கொரோனா நிவாரணமாக ரூ.4,000 வழங்கும் கோப்பில் முதலில் மு.க. ஸ்டாலின் கையெழுத்திட்டார். கொரோனா நிவாரண நிதி முதல் தவணையாக தலா ரூ.2 ஆயிரம் 2.7 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு இம்மாதம் வழங்க முதலமைச்சர் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்நிலையில், முதல் தவணை ரூ. 2 ஆயிரம் கொரோனா நிதியை வருகின்ற 10 ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். நியாவிலை கடையில் கொரோனா நிதி தினசரி 200 பேருக்கு வழங்கப்படும். இதனைத் தொடர்ந்து ஒரு வாரத்திற்குள் அனைவருக்கும் ரூ. 2 ஆயிரம் நிதி உதவி வழங்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

author avatar
murugan