“நெல்லுக்கு குறைந்த பட்ச ஆதரவு விலை ரூ.100 ஆக உயர்த்தப்படும்” – அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம்..!

நெல்லுக்கு குறைந்த பட்ச ஆதரவு விலை ரூ.100 ஆக உயர்த்தப்படும் என்று வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கில் தொடங்கி, அந்த கூட்டத்தொடரில் சட்டப் பேரவையில் தமிழக அரசின் 2021-22 நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதனை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில்,இன்று இரண்டாவது சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது. இதில் தமிழக அரசின் வரலாற்றில் முதன்முறையாக தனி வேளாண் பட்ஜெட் தற்போது தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.அதன்படி, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் 273 பக்கங்கள் கொண்ட வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார். அப்போது,பேசிய அமைச்சர்,

“ஒரு குவிண்டால் சன்னரகத்திற்கு குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ.70 லிருந்து ரூ.100 ஆக உயர்த்தப்படும்.அதேபோல ஒரு குவிண்டால் நெல் சன்னரகம் ரூ.2,060 க்கும் மற்றும் சாதாரண ரகம் ரூ.2,015 க்கும் கொள்முதல் செய்யப்படும்”,என்று தெரிவித்தார்.