முக அழகை பராமரிக்க உதவும் பால் – உபயோகிக்கும் முறையை அறிந்து கொள்ளலாம் வாருங்கள்!

நாம் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய உணவு பொருட்களில் ஒன்றான பால் நமது முகத்தை அழகுபடுத்துவதற்கும் அதிக அளவில் உதவுகிறது. ஆரோக்கியத்தை அள்ளித் தரக்கூடிய பால் அழகையும் அள்ளித்தர போதுமானது. தினமும் பால் குடிக்கும் பொழுது எப்படி நமது உடல் ஆரோக்கியமாக இருக்குமோ அதே போல தினமும் நமது உடலில் மேற்பரப்பில் பாலை உபயோகிக்கும் பொழுது நமது உடலும் பளிச்சென்று மாறி பளபளப்புடன் அழகாகத் தோற்றமளிக்கும். இந்த பாலை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

தினமும் கடலை மாவுடன் பாலை கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து கழுவி வர முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், தேமல்கள், அலர்ஜி ஆகியவை ஏற்படாமல் பாதுகாக்கிறது. மேலும் இந்த பால் நமது உடலில் உள்ள இறந்த செல்களை வெளியேற்றி புதிய செல்களை உருவாக்குகிறது. உடல் முழுவதும் வாரம் ஒரு முறையாவது பால் தடவி குளிக்கும் பொழுது சருமம் மென்மையாக மாறும். மேலும் முகத்தில் உள்ள எண்ணெய் பசை மற்றும் இறந்த செல்களை அகற்றி முகம் பொலிவுடன் இருக்க உதவுகிறது.

தினமும் பால் மற்றும் வாழைப்பழத்தை பேஸ்ட் போல அரைத்து முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவி வர முகத்தில் காணப்படும் கூடிய சுருக்கங்கள் அனைத்தும் மறைந்து வறண்ட சருமம் மாறும். கடைகளில் நாம் வாங்கக்கூடிய மாய்ஸ்டரைசர்களுக்கு திலாக இயற்கையாக பால் மற்றும் வாழைப்பழத்தை உபயோகித்து முக அழகைப் பெறலாம். மேலும் பால் நமது தோலை சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்க உதவுகிறது. அதிலும் பசும்பால் உபயோகிப்பது மிகவும் நல்லது. உருளைக்கிழங்கை பசும்பாலில் கலந்து முகத்தில் தடவி வர முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் அனைத்தும் நீங்கும்.

author avatar
Rebekal