மியான்மரில் இன்று காலை காலை 08:15 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் தீவிரம் ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் (NCS) தெரிவித்துள்ளது.
பூமியின் மேற்பரப்பிலிருந்து 14 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும், இந்த நிலநடுக்கத்தால் மின்கம்பங்கள் கீழே விழுந்து மின்விநியோகம் தடைபட்டுள்ளது. மியான்மரில் இந்த மாதத்தில் இது 2வது நிலநடுக்கம் ஆகும், முன்னதாக மே 2ஆம் தேதியும் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில், அருணாச்சல பிரதேசத்தின் சாங்லாங்கில் ரிக்டர் அளவுகோலில் 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.