#IPL 2020 டாஸ் வென்ற MI… அதிரடி காட்ட காத்திருக்கும் RCB…!

இன்று ஐபிஎல் தொடரின் 48- வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகிறது. இந்த போட்டி அபுதாபி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் பொல்லார்ட்  பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

விளையாடும் வீரர்கள் விவரம். 

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வீரர்கள்:

படிக்கல், ஜோஷ் பிலிப், விராட் கோலி (கேப்டன்), ஏபி டிவில்லியர்ஸ் (விக்கெட் கீப்பர்), குர்கீரத் சிங் மான், சிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், கிறிஸ் மோரிஸ், டேல் ஸ்டெய்ன், முகமது சிராஜ், சாஹல் ஆகியோர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள்:

குயின்டன் டி கோக் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், திவாரி, ஹர்திக் பாண்டியா, கீரோன் பொல்லார்ட் (கேப்டன் ), குருனால் பாண்டியா, ஜேம்ஸ் பாட்டின்சன், ராகுல் சாஹர், ட்ரெண்ட் போல்ட், பும்ரா ஆகியோர் இடப்பெற்றுள்ளனர்.

இந்நிலையில் இந்த இரண்டு அணிகளும் இதுவரை 26 போட்டிகள் நேருக்கு நேர் மோதியதில் மும்பை அணி 16 முறையும் பெங்களூர் அணி 10 முறையும் வெற்றிபெற்றுள்ளது என்பது குறிப்பிடதக்கது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.