ஹாலிவுட்டின் எம்.ஜி.எம் ஸ்டுடியோவை இத்தனை கோடிகளுக்கு வாங்கிய அமேசான்..!

ஹாலிவுட்டின் பிரபல ஸ்டுடியோக்களில் ஒன்றான எம்ஜிஎம் ஸ்டுடியோவை,ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனமான அமேசான் வாங்கியுள்ளது.

ஹாலிவுட் படங்களின் தொடக்க காலத்தில் முடி சூடா மன்னனாக விளங்கிய ஸ்டுடியோக்களில் அமெரிக்காவின் எம் ஜி எம். நிறுவனமும் ஒன்று,இது கர்ஜிக்கும் சிங்க சின்னத்திற்கு பெயர் பெற்றது.இந்த ஸ்டுடியோவானது 1924 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.அதன் பின்னர்தான் வால்ட் டிஸ்னி,வார்னர் பிரதர்ஸ் போன்ற ஸ்டுடியோ நிறுவனங்கள் தோன்றின.இருப்பினும்,எம்ஜி எம் நிறுவனம் தி ஹேண்ட்மெய்ட்ஸ் டேல், மற்றும் லீகலி ப்ளாண்ட் ,சைலன்ஸ் ஆஃப் தி லாம்ப்ஸ்,கிளாசிக் உள்ளிட்ட 4,000 திரைப்படங்களையும்,17,000 தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்,இந்த எம்ஜிஎம் ஸ்டுடியோவை,பிரபல ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனமான அமேசான் ப்ரைம் நிறுவனம் தற்போது 845 கோடி அமெரிக்க டாலர்கள் கொடுத்து வாங்கியுள்ளது.

இதுகுறித்து,அமேசான் ஸ்டுடியோஸின் மூத்த துணைத் தலைவர் மைக் ஹாப்கின்ஸ் கூறுகையில்,”எம்ஜிஎம் ஸ்டுடியோவை வாங்கியதன் மூலம்,நெட்ஃபிலிக்ஸ் மற்றும் டிஸ்னி + போன்ற ஸ்ட்ரீமிங் போட்டியாளர்களை விட அமேசான் பிரைம் முன்னிலை வகிக்க வாய்ப்புள்ளது”,என்று கூறினார்.