விநாடிக்கு 4,665கன அடியாக குறைந்த மேட்டூர் அணை நீர்வரத்து.!

விநாடிக்கு 4,665கன அடியாக குறைந்த மேட்டூர் அணை நீர்வரத்து.!

மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து விநாடிக்கு 4,665 கன அடியாக குறைந்துள்ளது

கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து காவிரி ஆற்றில் விநாடிக்கு 1லட்சத்து 50ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்பட்டது. அதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்தும் அதிகரித்தது.பின்னர் மழையின் அளவு குறைந்ததை அடுத்து அணைக்கு வரும் நீர்வரத்தும் குறைந்து வந்தது.

அந்த வகையில் தற்போது அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 6, 204கன அடியிலிருந்து 4,665 கன அடியாக குறைந்துள்ளது . எனவே தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 94.92அடியாக உள்ளது. மேலும் அணையின் நீர் இருப்பு 58.45டிஎம்சியாகவும் உள்ளது. மேலும் விவசாய பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 18000 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

Join our channel google news Youtube