பார்சிலோனா அணியில் இருந்து விலகிய மெஸ்ஸி..!

பார்சலோனா அணியுடன் மெஸ்ஸி செய்து இருந்த ஒப்பந்தம் கடந்த ஜூலை மாதத்துடன் நிறைவடைந்தது.

அர்ஜெண்டினா கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி பார்சலோனா கால்பந்து அணிக்காக விளையாடி வந்தார். பார்சலோனா அணியுடன் மெஸ்ஸி செய்து இருந்த  ஒப்பந்தம் கடந்த ஜூலை மாதத்துடன் நிறைவடைந்தது. இதனால், மேலும் 5 ஆண்டுகள் பார்சலோனா அணிக்கும், மெஸ்ஸிக்கும் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்தநிலையில், பார்சிலோனா அணியுடனான ஒப்பந்தத்தில் மெஸ்ஸி கையெழுத்திடவில்லை.

இந்நிலையில், இனி பார்சிலோனா அணிக்காக மெஸ்ஸி விளையாட்டமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. மெஸ்ஸி கடந்த 2000 ஆம் ஆண்டு 13 வயது இருக்கும்போது  பார்சிலோனா அணியில் இணைந்தார். 13 வயது முதல் பார்சிலோனா அணிக்காக விளையாடி வந்த மெஸ்ஸி 21 ஆண்டுகளுக்குப் பிறகு அணியில் இருந்து வெளியேறியுள்ளார்.

மெஸ்ஸி பார்சிலோனா அணிக்காக 778 போட்டிகளில் விளையாடி 672 கோல்களை அடித்துள்ளார்.

author avatar
murugan