நம்பரை சேமிக்காமல் ” மெசேஜ் ” பண்ணுங்கள்..!!

ஸ்மார்ட் போன் இல்லாதவர்கள் கூட இருக்கலாம். ஸ்மார்ட் போனில் வாட்ஸ் அப் இல்லாதவர்கள் இருப்பது அரிதுதான்.

மெசேஜ் அப்ளிகேஷன்களில் முன்னணியில் இருக்கும் வாட்ஸ் அப், பயனாளர்களின் வசதிக்கேற்ப அவ்வபோது வசதிகளை மேம்படுத்திக்கொண்டே இருக்கிறது.Image result for வாட்ஸ் அப்ஆனால் அதில் உள்ள வசதிகள் நம்மில் பல பேருக்கு தெரிவதில்லை.

ஒருவருக்கு வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்ப வேண்டுமென்றால், அந்த எண்ணை செல்பேசியில் சேமித்தால் மட்டுமே அனுப்ப முடியும். அப்படி சேமிக்காமலேயே ஒருவருக்கு எப்படி வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்புவது என்பதுதான் நிறைய பேருக்கு கேள்வியாக இருக்கிறது.

அந்த கேள்விக்கு உங்களுக்கும்  இருந்தால், இந்த தகவல் நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும்.

தொலைபேசி எண்ணை வாட்ஸ் அப்பில் இணைக்கப்பட்டிருந்தால் மட்டுமே இருவருக்குள் வாட்ஸ் அப்பில் தகவல் பரிமாறிக்கொள்ள முடியும். வாட்ஸ் அப்பில் இணைக்கப்படாத ஒருநபருக்கு வாட்ஸ் அப் வழியாக ஒருபோதும் மெசேஜ் அனுப்ப முடியாது என்பதை நினைவில்கொள்ளவேண்டும்.

சரி. நாம் மெசேஜ் அனுப்ப உள்ள நபரின் எண் வாட்ஸ் அப்பில் இருந்து, அந்த எண்ணை சேமிக்காமலே மெசேஜ் எப்படி அனுப்புவது..?

 

  1. உங்கள் மொபைலில் க்ரோம், அல்லது ஏதேனும் வெப் ப்ரவுசரை திறக்கவும்.
  2. https://api.WhatsApp.com/send?என  மேற்காணும் முகவரியை இட்டு எண் என்று இருக்கும் இடத்தில் யாருக்கு அனுப்ப நினைக்கிறீர்களோ அவரது எண்ணை டைப் செய்யவும். உதாரணத்திற்கு எண் +91-9990012345 என்றிருந்தால் 919990012345 என்று டைப் செய்யவும்.
  3. இப்போது எண்டர் அழுத்தவும்
  4. திரையில் Message என்று பச்சை நிற பட்டன் தோன்றும். அதை அழுத்தவும்.
  5. தானாக வாட்ஸ் அப் திறந்து அந்த எண்ணுக்கு மெசேஜ் அனுப்பும் பக்கத்திற்கு செல்லும்.
  6. https://wa.me/WhatsAppNumber இந்த லிங்கையும் பயன்படுத்தி மெசேஜ் அனுப்பலாம். WhatsAppNumber என்பதற்கு பதில் எண்ணை டைப் செய்து மெசேஜ் அனுப்பலாம்.

DINASUVADU 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment