கூலிப்படையினர் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் – டிஜிபி சைலேந்திரபாபு!

கூலிப்படையினர் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் கடந்த இரு தினங்களில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் 2,512 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். இது குறித்து நேற்று மாலை நான்கு மாவட்ட எஸ்பிகளுடன் நெல்லை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வைத்து தமிழக போலீஸ் டிஜிபி சைலேந்திரபாபு அவர்கள் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.

இந்த கூட்டத்திற்கு பின்பதாக பேசிய அவர், தமிழகத்தில் கூலி படையினரின் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் எனவும், நெல்லை, திண்டுக்கல் போன்ற மாவட்டங்களில் பழிக்குப்பழியாக கொலை செய்பவர்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடக் கூடியவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

மேலும் கொலை வழக்குகளில் கைதான குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை பெற்றுத்தர நீதிமன்ற விசாரணையை துரிதப்படுத்த, அதற்கான தனி படை அமைக்கப்படும் எனவும், போலீசின் அதிரடி வேட்டை தொடரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

author avatar
Rebekal