மெகா தடுப்பூசி முகாம்: 15.23 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது – ராதாகிருஷ்ணன்

தமிழகம் முழுவதும் நடைபெறும் முகாம்களில் 6 மணி நிலவரப்படி 15.23 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை இன்னும் முழுமையாக நிறைவடையாத நிலையில், மூன்றாவது அலையை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.

அதே சமயத்தில், கடந்த 12ம் தேதி தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் சுமார் 10000க்கும் மேற்பட்ட மையங்களில் நடத்தப்பட்டது. இதில் இதுவரை இல்லாத  அளவிற்கு 28 லட்சத்து 91 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு புதிய சாதனை படைத்தது. இதனைத்தொடர்ந்து இன்று இரண்டாவது மெகா தடுப்பூசி முகாம், சுமார் 20 ஆயிரம் மையங்களில் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், தமிழகம் முழுவதும் நடைபெறும் முகாம்களில் 6 மணி நிலவரப்படி 15.23 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இரவு 7 மணி வரை தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது என்றும் தடுப்பூசிகள் கையிருப்பு தட்டுப்பாடுகள் உள்ளது எனவும் கூறியுள்ளார். செப்டம்பர் மாதத்தில் இதுவரை 1 கோடி பெருகும் மேல் தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்றும் தடுப்பூசி கையிருப்பு இருந்ததால், சிறப்பாக செயல்பட முடிந்தது எனவும் தெரிவித்தார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்