நெல்லிக்காயில் உள்ள நெகிழ வைக்கும் மருத்துவ பயன்கள்…!!!

நெல்லிக்காயை பொறுத்தவரை நாம் விரும்பி உன்ன கூடிய ஒன்று தான். நெல்லியில் பெரிய நெல்லி, சிறிய நெல்லி என இரு வகை உள்ளது. இப்போது நாம் பார்க்கப்போவது சிறிய நெல்லியை பற்றி தான். நெல்லியில் நாம் நினைத்து பார்க்காத சத்துக்கள் அதில் அதிகமாக உள்ளது.

இந்த சிறிய நெல்லிக்காயை உண்டால் காய்ச்சல், சளி போன்ற பிரச்சனைகள் ஏற்படும் என்று நமது வீட்டில் உள்ள பெரியவர்கள் கூறுவது உண்டு. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது நம் அனைவருக்கும் தெரிந்த பழமொழி தான். அது போல் இந்த நெல்லியை அளவோடு சாப்பிட்டால் அதில் இருந்து பல நண்மைகளை பெற்று கொள்ளலாம்.
சத்துக்கள் :
நெல்லிக்காயில் வைட்டமின் சி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு சத்து போன்ற பல சத்துக்கள் உள்ளது. பழங்களில் உள்ளதை விட இந்த காயில் சத்துக்கள் அதிகமாக உள்ளது.
பயன்கள் :
இளமையான தோற்றம் :

இந்த நெல்லிக்காயை உண்ணும் போது நமது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி இளமையாக இருக்க உதவுகிறது.
ஈரலை பாதுகாக்கிறது :
நெல்லிக்காய் சாப்பிடும் போது ஈரலை தூண்டி நன்கு செயல்பட வைத்து, உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றி, ஈரலை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.
ஜீரண சக்தி :
நெல்லிக்காயை நாம் உண்ணும் போது, ஜீரண சக்தி அதிகரித்து தாதுக்களை நமது உடல் ஏற்றுக்கொள்ள துணை புரிகிறது.
கண் ஆரோக்கியம் :

நெல்லி இலையை நீரில் ஊறவைத்து கஷாயம் செய்து கண்களை கழுவினால் கண்நோய்கள் நீங்கும். அதேபோல் நெல்லிக்காயை அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் கண்கள் குளிர்ச்சி பெறும்.
கொழுப்பு :
நெல்லிக்காயை சாப்பிடும் போது உடலில் உள்ள நச்சுக்களை நீக்கி, கொழுப்புகளை கரைத்து உடல் எடையை குறைக்க உதவியாயிருக்கும்.
வாந்தி :
நெல்லிக்கனி சாப்பிட்டால், பேருந்து பயணம் செய்பவர்கள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் வாந்தியை தடுக்கிறது.
மாரடைப்பு :

நெல்லிக்காயை சாப்பிடும்போது இதய வால்வுகளில், இரத்த குழாய்களில் ஏற்படும் அடைப்பை தடுத்து மாரடைப்பு ஏற்படாமல் தடுக்கிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment