மருத்துவ மாணவர்கள் 2 ஆண்டுகள் அரசு மருத்துவமனைகளில் பணிபுரிய வேண்டும்! தமிழக அரசின் அரசாணை செல்லும்!

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் மருத்துவ கல்லூரிகளில், மருத்துவ மேற்படிப்பு படிக்கும் மாணவ, மாணவியர்,  படித்து முடித்தவுடன் இரண்டு ஆண்டுகள் அரசு மருத்துவமனைகளில் கட்டாயம்  பணியாற்ற வேண்டும் என நிபந்தனை உள்ளது. இவர்கள் இரண்டு ஆண்டுகள் பணியை முடித்த பின்பு தான் இவர்களுக்கு  சான்றிதழ் திரும்ப வழங்கப்படும் என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இதனை எதிர்த்து,சென்னை உயர் நீதிமன்றத்தில் 276  மருத்துவ மாணவ, மாணவிகள்  வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, மாணவ மாணவிகள் இரண்டு ஆண்டுகள் அரசு மருத்துவமனைகளில் பணிபுரிய வேண்டிய அவசியம் இல்லை  என்றும், அவர்களின் சான்றிதழ்களை திரும்ப வழங்கவேண்டும் என்றும் தீர்ப்பளித்தார்.

இதனையடுத்து, தமிழக அரசு சார்பில், தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து, உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய  அமர்வு முன் விசாரணைக்கு வந்த நிலையில், தமிழக மருத்துவக் கல்லூரிகளில் எம்.டி., எம்.எஸ். படிக்கும் மருத்துவர்கள் அரசு மருத்துவமனையில் பணிபுரிய வேண்டும் என்ற தமிழக அரசின் உத்தரவு செல்லும் என்று  உத்தரவிட்டுள்ளது.

மேலும், தமிழக அரசின் உத்தரவு செல்லாது என்ற தனி நீதிபதியின் தீர்ப்பையும் உயர்நீதிமன்ற அமர்வு ரத்து செய்ததுள்ளது.

லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Recent Posts

ராகுல்- டிகாக் கூட்டணியில் சரிந்த சிஎஸ்கே ! தொடர் வெற்றிக்கு முற்று புள்ளி வைத்த லக்னோ!

ஐபிஎல் 2024 : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியும், சென்னை அணியும் மோதியது.' ஐபிஎல் தொடரில் இன்றைய 34-வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும்,…

3 hours ago

ஆர்வமுடன் களமிறங்கிய வாக்காளர்கள்… கடந்த முறையை விட எகிறும் எண்ணிக்கை.?

Election2024 : தமிழகத்தில் 7 மணி நிலவரப்படி 72.09 % வாக்குகள் பதிவாகியுள்ளது. கடந்த 2019 தேர்தலில் மொத்தமாக 72.44 % வாக்குகள் பதிவாகியது. 21 மாநிலங்களில்…

4 hours ago

மாற்றத்துடன் பேட்டிங் களமிறங்கும் சென்னை அணி !! பந்து வீச தயாராகும் லக்னோ !!

ஐபிஎல் 2024: ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் தற்போது டாஸ் வென்ற லக்னோ அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் லக்னோ…

7 hours ago

நிறைவடைந்தது தேர்தல் நேரம்…! டோக்கன் கொடுத்து வாக்குப்பதிவு தீவிரம்….!

Election2024: தமிழகம் மற்றும் புதுச்சேரியில்  நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தற்போது நிறைவடைந்துள்ளது. ஜனநாயக திருவிழாவான நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகம் மற்றும்…

7 hours ago

துப்பாக்கிச்சூடு… EVM மிஷின் சேதம்… முடிந்தது மணிப்பூர் முதற்கட்ட தேர்தல்.!

Election2024 : மணிப்பூர் மாநிலத்தில் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. மணிப்பூர் மாநிலத்தில் உள்ள உள் மற்றும் வெளி மணிப்பூர் என இரு மக்களவை தொகுதிகளில் பல்வேறு பகுதிகளுக்கு…

7 hours ago

ரிஷப் பண்ட் பார்ம் எப்படி இருக்கு? ஜாகீர் கான் சொன்ன பதில்!

Rishabh Pant : ரிஷப் பண்ட்  சமீபத்திய பார்ம் எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு  ஜாகீர் கான் சமீபத்திய பேட்டி ஒன்றில் பதில் அளித்துள்ளார். டெல்லி கேப்பிட்டல்ஸ்…

7 hours ago