கொரோனா இல்லதாவருக்கும் கொரோனா இருப்பது போல் காண்பித்துள்ளது மெடால் ஆய்வகம் – தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பு.!

இந்தியாவில் கொரோனா தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் சென்னையில் உள்ள மெடால் ஆய்வகம் வேற்று மாநிலத்தில் உள்ள கொரோனா டெஸ்ட் ரிசல்ட்டுகளை கள்ளக்குறிச்சியில் இருப்பது போல் சித்தரித்துள்ளது.

கொரோனா இல்லதாவருக்கும் கொரோனா இருப்பது போல் காண்பித்துள்ளது மெடால் ஆய்வகம். கொல்கத்தாவில் உள்ள கொரோனா பரிசோதனை முடிவுகளை தமிழகத்தில் உள்ள கள்ளக்குறிச்சியில் இருப்பது காண்பித்துள்ளது.இதனால் தமிழகத்தில் கொரோனா அதிகமாக உள்ளது என்பது போல் ஒரு தோற்றத்தை ஏற்படுத்தியதாக தமிழக சுகாதார துறை, மெடால் ஆய்வகத்திற்கு ஒரு நோட்டிஸ் அனுப்பியுள்ளது.

அதில், வேறு மாநிலங்களில் கொரோனா தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கையை தமிழகத்தில் இருப்பவர்களுக்கு சேர்த்ததாக தமிழக சுகாதார துறை தெரிவித்துள்ளது. ஐ.சி.எம்.ஆர். பதிவேட்டில் கொல்கத்தாவில் உள்ள கொரோனா நோயாளிகளின் மாதிரிகளை கள்ளக்குறிச்சியில் இருப்பவர்களுக்கு கொரோனா தோற்று இருப்பது போல் அதில் பதிவேற்றியுள்ளது. மேலும், மெடால் ஆய்வகம் மே 19, 20 ஆகிய தினங்களில் வந்த 4000 கொரோனா நெகட்டிவ் முடிவுகளை கொரோனா பாசிட்டிவ் போன்று ஐ.சி.எம்.ஆர். பதிவேட்டில் சேர்த்துள்ளது. ஆனால் கொரோனா தொற்று பாதித்தவர்களின் முழுமையான விவரங்களை பதிவேட்டில் சேர்க்காமல் இருந்ததையும் தமிழக பொது சுகாதாரத்துறை கண்டுபிடித்துள்ளது.