ஈரானில் சிக்கியுள்ள மீதமுள்ள மீனவர்களையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – வெளியுறவுத்துறை அமைச்சருக்கு தமிழக முதல்வர் கடிதம்

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதலமைச்சர்  பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

கொரோனா முன்னெச்சரிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், உலக நாடுகள் பெரும்பாலானவையும் ஊரடங்கை அமல்படுத்தியதால், பொது போக்குவரத்துகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

இதனால், ஈரான் நாட்டில் மீன்பிடிக்க சென்ற  தமிழக மீனவர்கள் அங்கு சிக்கி தாயகம் திரும்ப முடியாமல் தவித்து வந்தனர்.எனவே வெளிநாடுகளில் சிக்கியுள்ள ‘ஆபரேசன் சமுத்திர சேது’ திட்டத்தின் கீழ் இந்தியாவிற்கு கொண்டு வரப்படுகின்றனர்.அந்த வகையில் தான், ஈரானில் சிக்கித் தவித்த தமிழகம் மற்றும் கேரளாவை சேர்த்த மீனவர்கள் 687 பேர் மீட்கப்பட்டனர்.

இந்நிலையில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதலமைச்சர்  பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.அவரது கடிதத்தில் , ஈரானில் இருந்து தமிழக மீனவர்களை  மீட்டதற்கு நன்றி என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார் .மேலும் ஈரானில் சிக்கியுள்ள மீதமுள்ள 40 மீனவர்களையும் மீட்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளார்.