அமையுமா மூன்றாவது அணி…சந்திரசேகர் ராவ் சந்திப்பதை இரத்து செய்த மாயாவதி….!!

பாராளுமன்ற தேர்தலில் மூன்றாவது அணியை உருவாக்கும் சந்திரசேகர் ராவை சந்திப்பதை மாயாவதி நிறுத்தியுள்ள்ளதாக கூறப்படுகின்றது 
அடுத்த ஆண்டு வருகின்ற ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெற இருக்கும்  நாடாளுமன்ற தேர்தலை முன்னெடுக்கும் பணியில் அனைத்து கட்சிகளும் இறங்கியுள்ள. குறிப்பாக இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி பல்வேறு மாநில  கட்சிகளுடன் இதற்கான பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது. குறிப்பாக மத்தியில் ஆளும் பா.ஜனதாவுக்கு எதிராக காங்கிரஸ் தலைமையில் அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு ஒருங்கிணைத்து , பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றார்.
இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் தெலுங்கானாவில் வெற்றி பெற்று தொடர்ந்து இரண்டாவது முறையாக முதல்வரான சந்திரசேகர் ராவ் பா.ஜனதா, காங்கிரஸ் ஆகிய இரண்டு தேசிய கட்சிகளும் இல்லாத மூன்றாவது அணி என்று  புதிய கூட்டணியை உருவாக்க முயற்சியை மேற்கொண்டு ஒடிசா மாநில முதல்வர் நவீன் பாட்நாயக் , மேற்கு வங்காள மாநில முதல்வர் மம்தா பானர்ஜியை சந்தித்து பேசினார்.
அதோடு இல்லாமல் டெல்லி சென்று சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதியை சந்தித்து கூட்டணி மற்றும் மூன்றாவது அணி குறித்து தெலுங்கானா முதல்வர்  சந்திரசேகர் ராவ்  சந்தித்து பேசுவதாக இருந்தது.ஆனால் இந்த டெல்லியில் சந்திப்பு நடைபெறவில்லை.இதை தொடர்ந்து வருகிற 6–ந் தேதி ஐதராபாத் சென்று தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ்-வை  சந்திக்க உள்ளதாக அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார். அதே போல பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியையும் சந்திரசேகர் ராவ் சந்தித்து பேச திட்டமிட்டு இருந்தார்.ஆனால் தற்போது மாயாவதி தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ரா-வுக்கு நேரம் ஒதுக்காமல்  சந்திப்பதை ஒத்திவைத்தார் என்று கூறப்படுகின்றது. இதனால் காங்கிரஸ் மற்றும் பிஜேபி-க்கு மாற்றாக மூன்றாவது அணி உருவாகுமா என்று சந்தேகம் எழுந்துள்ளது..

Leave a Comment