#BREAKING: நாளை திறக்கலாம், ஆனால் பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது – உயர்நீதிமன்றம்

ஜெயலலிதாவின் வேதா நினைவு இல்லத்தை அரசு திறக்கலாம், ஆனால் பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்கக்கூடாது என ஐகோர்ட் உத்தரவு.

கடந்த 2017ஆம் ஆண்டு சென்னை போயஸ் கார்டனில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லம் நினைவு இல்லமாக அறிவிக்கப்பட்டது. ஜெயலலிதாவின் வேதா நினைவு இல்லத்தை பொதுமக்கள் பார்வைக்கு நாளை திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே, வேதா இல்லத்தை நினைவில்லமாக மாற்றும் அரசின் நடவடிக்கைக்கு எதிராக தீபா, தீபக் தொடர்ந்த வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வந்த நிலையில் இன்று இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று கூறப்பட்டது.

இந்நிலையில், சென்னை போயஸ் கார்டனில் அரசுடைமையாக்கப்பட்ட ஜெயலிலதா நினைவு இல்லத்தை நாளை திறக்க தடையில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால், வேதா நினைவு இல்லத்தை பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்கக்கூடாது என்று குறிப்பிட்டுள்ளது. ஜெ.தீபா, தீபக் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற நீதிபதி சேசாஷாயி இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளார். வேதா இல்ல பொருட்கள் முழுமையாக மதிப்பீடு செய்யாமல் அவசரமாக கையகப்படுத்தியுள்ளனர் என தீபா தெரிவித்துள்ளார்.

நினைவு இல்லமாக மாற்றுவது குறித்து பரிசீலனை செய்ய நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது என்றும் தீபா கூறியுள்ளார். மேலும் வழக்கு முடியும் வரை பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்கக்கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Recent Posts

என்னப்பா அப்படியே இருக்கு! மெழுகு அருங்காட்சியகத்தில் விராட் கோலியின் சிலை !!

 Virat Kohli : ஜெய்ப்பூரில் உள்ள மெழுகு அருங்காட்சியத்தில் விராட் கோலியின் மெழுகு சிலையை திறந்துள்ளனர். இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஆன விராட் கோலியின் மெழுகு…

11 mins ago

அய்யா! பும்ரா பந்தை அடிச்சிட்டேன்! அசுதோஷ் சர்மா உற்சாக பேச்சு!

ஐபிஎல் 2024  : பும்ரா பந்தை அடித்ததன் மூலம் என்னுடைய கனவு நிறைவேறிவிட்டது என அசுதோஷ் சர்மா தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ்…

21 mins ago

அடடே.! பீட்ரூட்டை வைத்து ரசம் கூட செய்யலாமா? வாங்க தெரிஞ்சுக்கலாம்.!

பீட்ரூட் ரசம் -பீட்ரூட் ரசம் செய்வது எப்படி என இப்பதிவில் காணலாம். பீட்ரூட்டை ஏதேனும் ஒரு வகையில் நம் உணவில்  தினமும்  சேர்த்து கொண்டோம் என்றால்  ரத்த…

25 mins ago

ஈரான் மீது இஸ்ரேல் பதில் தாக்குதல்… அதிகாலை நடந்த பரபரப்பு சம்பவம்!

Iran Israel Conflict: ஈரான் நாட்டின் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேல் - ஈரான் இடையே கடந்த சில நாட்களாக போர்…

30 mins ago

மணிப்பூர் வாக்குச்சாவடியில் துப்பாக்கி சூடு.! பதற்றத்தில் வாக்காளர்கள்…

Election2024 : மணிப்பூர் வாக்குச்சாவடியில் மர்மநபர்கள் தூப்பாக்கி சூடு நடத்தியதால் பெரும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. நாட்டில் உள்ள 543 மக்களவை தொகுதிகளில் 102 தொகுதிகளில்…

34 mins ago

வாக்களித்தார் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்!

Vijay : சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடிக்கு வந்து விஜய் வாக்கு செலுத்தினார். இந்தியா முழுவதும் 21 மாநிலங்களில் இன்று (ஏப்ரல் 19) நாடாளுமன்றம் மக்களவைத் தேர்தலுக்கான…

1 hour ago