#IPL2022: நெருக்கடியில் டெல்லி அணி.. மும்பை அணியுடன் இன்று மோதல்!

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 69-வது போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதவுள்ளது. இந்த போட்டி, மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ளது.

ஐபிஎல் தொடர் கோலாகலமாக நடைபெற்று வரும் நிலையில், தற்பொழுது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அந்தவகையில் தற்பொழுது 3 அணிகள் பிளே ஆப்ஸ் சுற்றுக்கு தகுதிபெற்ற நிலையில், இன்று நடைபெறவுள்ள 69-வது போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதவுள்ளது. இந்த போட்டி, மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ளது.

நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இவ்விரு அணிகளும் 13 போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில் 3 போட்டிகளில் மட்டுமே வெற்றிபெற்று பிளே ஆப்ஸ் சுற்றுக்குள் நுழையும் வாய்ப்பை இழந்தது. அதேபோல டெல்லி அணி, 7 போட்டிகளில் வெற்றிபெற்று 5-ம் இடத்தில் உள்ளது. இந்த போட்டியில் வெற்றிபெற்றால் பிளே ஆப்ஸ் சுற்றுக்குள் நுழையும் 4-வது அணியாகும். அதேபோல இந்த போட்டியில் தோல்வியை சந்தித்தால் பெங்களூர் அணி பிளே ஆப்ஸ் சுற்றுக்குள் நுழையும் வாய்ப்பை பெரும். இதனால் டெல்லி அணி கட்டாயம் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

Leave a Comment