#IPL2022: பேட்டிங்கில் அதிரடி காட்டிய ஹர்திக் பாண்டியா.. ராஜஸ்தான் அணிக்கு 193 ரன்கள் இலக்கு!

#IPL2022: பேட்டிங்கில் அதிரடி காட்டிய ஹர்திக் பாண்டியா.. ராஜஸ்தான் அணிக்கு 193 ரன்கள் இலக்கு!

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி, 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் அடித்தது. 193 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்பொழுது ராஜஸ்தான் அணி களமிறங்கியுள்ளது.

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதி வரும் நிலையில், இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மத்தியூ வேடு – ஷப்மன் கில் களமிறக்கினார்கள். தொடக்கத்தில் வேடு 3 பவுண்டரிகள் அடித்து அதிரடியாக ஆடத்தொடங்க, 12 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை இழந்தார்.

அவரையடுத்து களமிறங்கிய விஜய்சங்கர் 2 ரன்கள் மட்டுமே அடித்து தனது விக்கெட்டை இழக்க, மறுமுனையில் இருந்த சப்மன் கில் 13 ரன்கள் அடித்து தனது விக்கெட்டை இழந்தார். பவர் பிளே ஓவரில் 3 விக்கெட்களை பஞ்சாப் அணி இழந்ததை தொடர்ந்து, அடுத்தடுத்து விக்கெட்கள் விழும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதனை அணியின் கேப்டன் பொய்யாக்கினார்.

ஹர்திக் பாண்டியா அதிரடியாக ஆடத்தொடங்க, அவருக்கு சமமாக மறுமுனையில் இருந்த அபினவ் மனோகர் சிறப்பாக ஆடிவந்தார். 43 ரன்கள் அடித்து அபினவ் தனது விக்கெட்டை இழக்க, அவரையடுத்து களமிறங்கிய டேவிட் மில்லர், ஹர்திக் பாண்டியாவுடன் இணைந்து அதிரடியாக ஆடிவந்தார். இறுதியாக குஜராத் அணி, 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்கள் இழப்பிற்கு 192 ரன்கள் குவித்தது. இதில் அதிகபட்சமாக ஹர்திக் பாண்டியா 52 பந்துகளில் 82 ரன்கள் அடித்து அசத்தினார். தற்பொழுது 193 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கியுள்ளது.

Join our channel google news Youtube