இந்தியாவின் 2021-ன் பிரபலமான திரைப்படங்களின் பட்டியலில் முதலிடத்தை பிடித்த மாஸ்டர்.!!

  • IMDb வெளியிட்டுள்ள 2021-ம் ஆண்டின் பிரபலமான இந்தியப் படங்கள் பட்டியலில் மாஸ்டர் முதலிடத்திலும், கர்ணன் ஆறாவது இடத்தையும் பிடித்துள்ளது.

பிரபல திரைப்பட தரவுகள் இணையதளமான IMDb ஆண்டு தோறும் இந்திய அளவில் அதிகம் பார்க்கப்பட்ட படங்கள் மற்றும் வெப் சீரிஸ் தொடர்கள் என்னென்ன என்பது குறித்த பட்டியலை வெளியீடுகின்றனர். இந்நிலையில், இந்த வருடம் (2021) ஆண்டின் பிரபலமான இந்தியப் படங்கள் பட்டியலை IMDb வெளியிட்டுள்ளது.

இந்த பட்டியலில் முதலிடத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்திற்கு முதலிடம் கிடைத்துள்ளது.  அதைபோல் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் திரைப்படம் ஆறாவது இடத்தை பிடித்துள்ளது.

1. மாஸ்டர்

2. ஆஸ்பிரன்ட்ஸ் (வெப் சீரிஸ்)

3. தி வைட் டைகர்

4. த்ரிஷ்யம் 2

5. நவம்பர் ஸ்டோரி

6. கர்ணன்

7. வக்கீல் ஸாப்

8. மஹாராணி (வெப் சீரிஸ்)

9. க்ராக்

10. தி கிரேட் இண்டியன் கிச்சன்

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.