தளபதி 65 படத்தின் மாஸான லேட்டஸ்ட் தகவல்..!!


9
/ 100


தளபதி 65 படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியா நாட்டிலும் அடுத்த கட்ட படப்பிடிப்பு காஸ்மீரில் வைத்து நடைபெறவுள்ளதாகவும் தகவல். 

நடிகர் விஜய் மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகவுள்ள தளபதி 65 படத்தில் நடிக்கவுள்ளார். சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளார். இந்த திரைப்படத்திற்கான பூஜை கடந்த மாதம் 31 ஆம் தேதி நடைபெற்றது.

இந்த நிலையில் நேற்று நடிகர் விஜய் இந்த திரைப்படத்தின் படப்பிடிற்காக சென்னையில் இருந்து விமானத்தின் மூலம் தளபதி 65 படத்தின் படப்பிடிப்பிற்காக ஜார்ஜியா நாட்டிற்கு சென்றுள்ளார். மேலும் இந்த படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியா நாட்டில் வைத்து நடைபெறவுள்ளதாகவும். அடுத்த கட்ட படப்பிடிப்பு காஸ்மீரில் வைத்து நடைபெறவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Exit mobile version