ஒரே நேரத்தில் இரண்டு படம்.! தனுஷின் மாஸ்டர் பிளான்.?

தனுஷ் திருச்சிற்றம்பலம், மாறன் ஆகிய இரு பட படப்பிடிப்பிலும் மாறி மாறி நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடிகர் தனுஷ் தற்போது திருச்சிற்றம்பலம், மாறன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் மாறன் திரைப்படத்தை கார்த்திக் நரேன் இயக்கி வருகிறார். படத்தின்  இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுமட்டுன்றி இயக்குனர் மித்ரன் ஆர்.ஜவஹர் இயக்கத்தில் திருச்சிற்றம்பலம்  திரைப்படத்திலும் தனுஷ் நடித்து வருகிறார்.

இந்த திரைப்படத்தின் ஷூட்டிங்கும் சென்னையில் தொடங்கப்பட்டு தற்போது விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த இரு பட ஷூட்டிங்கும் சென்னையில் நடைபெறுவதால், நடிகர் தனுஷ் இரு படபடப்பிடிப்பிலும் மாறி மாறி கலந்து கொண்டு நடித்து வருவதாக தகவல்கள் கசிந்துள்ளது.

மேலும் நடிகர் தனுஷ் நடிப்பில் அட்ராங்கிடே, தி கிரே மேன் போன்ற  திரைப்படங்களும் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படங்களின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.