ஆர்யா நடிக்கும் “சல்பேட்டா” படத்தின் மாஸ் அப்டேட்.!

பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் சல்பேட்டா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் டிச.,2-ம் தேதி வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கபாலி, காலா படத்திற்கு பிறகு பா.ரஞ்சித் இயக்கி வரும் திரைப்படம் சல்பேட்டா. இப்படத்தில் ஆர்யா கதாநாயகனாக நடிக்கிறார். மேலும் அவருக்கு ஜோடியாக துஷாரா நடிக்கவுள்ளார்.இந்த திரைப்படம் வடசென்னை குத்துச்சண்டை வீரர்களின் கதைக்களத்தை கொண்டது .அதற்காக ஆர்யா தீவிர உடற்பயிற்சி மூலம் உடலை ஃபிட்டாக மாற்றியதும்,அப்புகைபடங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலானதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது ஆர்யாவின் சல்பேட்டா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வரும் 2-ம் தேதி வெளியிட உள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.இது ஆர்யாவின் 30-வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.