மாஸ் பட நடிகை சொன்ன மாஸான தகவல் …, வாழ்த்தும் ரசிகர்கள்…!

தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழி திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை பிரணிதா சுபாஷ். தமிழில் மாஸ் எனும் சூர்யாவின் படத்தில் நடித்ததன் மூலம் அதிக அளவில் ரசிகர்கள் மத்தியில் ஈர்க்கப்பட்டார்.

அண்மையில் தொழிலதிபர் நிதின் ராஜுவை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர். தற்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் தான் கர்ப்பமாக இருப்பதாக புகைப்படத்துடன் அறிவித்துள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருவதுடன், பிரணிதாவுக்கு அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.