ஆக்சிஜன் தேவை..!கார் உற்பத்தியை நிறுத்தும் மாருதி நிறுவனம்..!

ஆக்சிஜன் தேவை..!கார் உற்பத்தியை நிறுத்தும் மாருதி நிறுவனம்..!

நாட்டின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஜிகி நிறுவனம்,மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவுவதைக் கருத்தில் கொண்டு தங்களது கார் தயாரிப்பை நிறுத்தப் போவதாக அறிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் மிகவும் மோசமாக இருந்து வருகிறது.இதனால்,பல்வேறு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை அதிகரித்து வருகிறது.

இதனையடுத்து பல தனியார் நிறுவனங்கள்,தங்களால் முடிந்த அளவு ஆக்சிஜன் சிலிண்டர்களை மருத்துவமனைகளுக்குக் கொடுத்து உதவி வருகின்றன.அந்த வரிசையில் மாருதி நிறுவனமும் தற்போது ஆக்சிஜன் கொடுத்து உதவ முன்வந்துள்ளது.

இதுகுறித்து மாருதி நிறுனத்தின் அதிகாரி ஒருவர் கூறுகையில்,”காரின் உதிரி பாகங்கள் தயாரிக்க பயன்படுத்தும் ஆக்சிஜனை மருத்துவமனைகளுக்கு கொடுக்க நாங்கள் முடிவு செய்துள்ளோம்.ஏனெனில்,மக்கள் ஆக்சிஜன் இல்லாமல் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.அதனால்,இந்த பேரிடர் காலத்தில் எங்களிடம் இருக்கும் ஆக்சிஜனை கார்கள் தயாரிக்கப் பயன்படுத்தாமல் மக்கள் உயிரைக் காப்பற்றுவதற்கு பயன்படுத்த உள்ளோம்”,என்று கூறினார்.

 

 

 

Join our channel google news Youtube