‘திருமணம் என்பது ஒப்பந்தமல்ல’ – தம்பதியினருக்கு அறிவுரை வழங்கிய சென்னை உயர்நீதிமன்றம்…!

அகந்தை, சகிப்புத்தன்மை ஆகிய குணங்களை காலணிகள் போல கருதி, வீட்டிற்கு வெளியிலேயே விட்டுவிட வேண்டும். இல்லையெனில் குழந்தைகள் பாதிக்கப்படுவர்.

சேலம் மாவட்டத்தில் கால்நடை மருத்துவராக பணியாற்றிய சசிகுமார் என்பவர் மீது, மனைவி இந்துமதி வன்முறை தடை சட்டத்தின் கீழ் வழக்கு  தொடர்ந்தார். இதனையடுத்து, சேலம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள  வழக்கை சுட்டிக்காட்டி சசிகுமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

பணியிடை நீக்க உத்தரவை ரத்து செய்யுமாறு, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன், சசிகுமாரை பணியிடை நீக்கம் செய்த உத்தரவை  ரத்து செய்து, 15 நாட்களில் மீண்டும் பணியில் சேர்க்க கால்நடை துறை இயக்குனருக்கு உத்தரவிட்டார்.

 மேலும், திருமணம் என்பது ஒப்பந்தம் அல்ல என்பதை தற்போதைய தலைமுறையினர் உணர்ந்து கொள்ள  வேண்டும். அகந்தை, சகிப்புத்தன்மை ஆகிய குணங்களை காலணிகள் போல கருதி, வீட்டிற்கு வெளியிலேயே விட்டுவிட வேண்டும். இல்லையெனில் குழந்தைகள் பாதிக்கப்படுவர் என்று அறிவுரை வழங்கியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.