நடிகை ஐஸ்வர்யா ராஜேஸ் தற்போது ‘தீராக் காதல்’ எனும் திரைப்படத்தில் நடிகர் ஜெய்க்கு ஜோடியாக நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் 26 அதாவது நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக ஒரு நாள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது.

அந்த வகையில், படத்தின் ப்ரோமோஷனுக்காக சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் திருமணம் பலருக்கு ஜோக் ஆகிவிட்டது என பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” திருமணம் என்றாலே இப்போது சில பேருக்கு மிகவும் ஜோக் ஆகிவிட்டது.

ஏனென்றால், திருமணம் செய்துகொண்டு சின்ன சின்ன விஷயங்களில் பிரச்சனை வந்தால் கூட, உடனடியாக பிரிந்து விடுகிறார்கள். திருமணம் செய்து வாழ்ந்தால் கண்டிப்பாக இரண்டு பேருக்கும் இடையில் நல்ல புரிதல் இருக்கவேண்டும். அது வாழ்க்கையில் மிகவும் அவசியமான ஒன்று.

திருமணம் செய்துவிட்டு 10,15 நாட்களில் பிரிவது மிகவும் தவறு மற்றும் ஆபத்தானது” என கூறியுள்ளார். மேலும், தீராக்காதல் படத்தை தொடர்ந்து ஐஸ்வர்யா ராஜேஸுக்கு அடுத்ததாக அவர் நடித்துள்ள இடம் பொருள் ஏவல் திரைப்படம் வெளியாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.