UlagaNayagan Birthday Party

நடிகர் கமல்ஹாசன் பிறந்தநாள் கொண்டாட்டம்: விழாவை சிறப்பித்த பிரபலங்கள்!

By

1960-ல் களத்தூர் கண்ணம்மா படத்தில் 6 வயதில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான உலக நாயகன் கமல்ஹாசன், 63 ஆண்டுகளாக தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்து மாபெரும் சாதனை படைத்தது வருகிறது.

   
   

அவர் ஒரு நடிகர் மட்டும் சொல்லிட முடியாத, தயாரிப்பாளர், பாடலாசிரியர், திரைக்கதை ஆசிரியர், இயக்குனர் என பன்முக திறமையுள்ள கமல்ஹாசன், இன்று தனது 69வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

தமிழ் சினிமாவின் அடையாளமாக மாறிய கமல்ஹாசனுக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் என பலரும் தங்களுடைய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில், கமல் பிறந்தநாளை முன்னிட்டு, நேற்றிரவு நடைபெற்ற பிறந்தநாள் பார்ட்டியில், நடிகர் சூர்யா, பாலிவுட் நடிகர் அமீர்கான், ஒளிப்பதிவாளர்  ரவி.கே சந்திரன், தயாரிப்பாளர் ஏ.வி.எம் சரவணன், நடிகர் பார்த்திபன் மற்றும் நடிகை குஷ்பு உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துகொண்டார்கள்.

 

தற்போது, கமல் பிறந்தநாள் விழா கொண்டாட்டங்களின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வகையில், இன்று சென்னை, நீலாங்கரையில் உள்ள R.K.Convention Centre அரங்கில் அவரது மக்கள் நீதி மய்யம் கட்சியின் தொண்டர்கள், நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் அவரது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடி வருகிறார்கள்.

Dinasuvadu Media @2023